Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளிகளில்… சற்றுமுன் அதிரடி உத்தரவு…!!!

பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணத்தை விட கூடுதலாக விண்ணப்பக் கட்டணம் வசூலிக்க கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஆண்டு முதலே பள்ளிகள் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே பாடங்கள் எடுக்கப்பட்டு வருகின்றது. இந்த ஆண்டு 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இன்றி தேர்ச்சி என்றும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு பதினோராம் வகுப்பு சேர்க்கை நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் தற்போது 27 மாவட்டங்களில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மாணவர் சேர்க்கையின் போது விண்ணப்ப படிவங்களுக்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. பெற்றோர் ஆசிரியர் சங்க இணைப்பு கட்டணத்தை விட கூடுதலாக விண்ணப்ப கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு பள்ளிகளுக்கு அறிவுறுத்த பள்ளிக் கல்வித் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் செங்கல்பட்டு அனகாபுத்தூர் அரசு பள்ளி மாணவர் சேர்க்கையில் ரூபாய் 50 க்கு பதில் ரூபாய் 100 வசூலிப்பதாக மனுதாரர் தொடர்ந்த வழக்கில், அறிவுறுத்தலை மீறும் தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |