Categories
உலக செய்திகள்

உலக மக்களை கொந்தளிக்க செய்த கறுப்பினத்தவர் கொலை.. தீர்ப்பு வெளியானது..!!

அமெரிக்காவைச் சேர்ந்த கருப்பினத்தவரை கொலை செய்த காவல் அதிகாரிக்கு 22 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள மினியாபோலிஸ் என்ற பகுதியில் கடந்த வருடம் மே மாதம் 25 ஆம் தேதி அன்று 46 வயதுடைய கருப்பினத்தவரான, ஜார்ஜ் பிளாய்டு, ஒரு கடையில் கள்ளநோட்டு கொடுப்பதற்கு முயற்சித்ததாக புகாரளிக்கப்பட்டது. அதன்பின்பு அங்கிருந்த காவல்துறையினர் ஜார்ஜிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அவரது கைகளை, பின்புறமாக கட்டி, கீழே தள்ளியுள்ளனர். இதில் ஒரு அதிகாரி ஜார்ஜின் கழுத்தின் மீது தன் முட்டியை வைத்து அழுத்தியதால், மூச்சு திணறி ஜார்ஜ் பிளாய்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இது குறித்த வீடியோ உலகெங்கும் பரவி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

எனவே, குற்றவாளியான, டெரக் சாவ்வின் என்ற 45 வயதுடைய காவல்துறை அதிகாரி உடனடியாக பணிநீக்கம் செய்யப்பட்டார். இதனையடுத்து 12 நீதிபதிகள் சேர்ந்து கடந்த ஏப்ரல் மாதத்தில், விசாரணை நடத்தியதில், அவர்தான் குற்றவாளி என்பது நிரூபிக்கப்பட்டது. எனவே டெரக் சாவ்வினுக்கு, 22 வருடங்களும் ஆறு மாதங்களும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

Categories

Tech |