கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள இளையான்குடி பகுதியில் பழனி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கொத்தனார் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் பழனியும் அவரது மனைவியும் சொத்து காரணமாக சில நாட்களாக சண்டை போட்டு வந்துள்ளனர். இதனால் சில நாட்களாக பழனி மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் பழனி வீட்டில் அனைவரும் திருமண விழாவிற்கு சென்றுள்ளனர். இதனையடுத்து வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் கதவை பூட்டி விட்டு அறையில் உள்ள மின்விசிறியில் பழனி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அதன்பின் அவரது அக்கா செல்வராணி எதிர்பாராதவிதமாக பழனியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது தனது சகோதரன் தூக்கிட்டு தற்கொலை செய்திருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து செல்வராணி காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பழனியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த இளையான்குடி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.