சில இளைஞர்கள் சேர்ந்து ராஜநாகம் பாம்பு ஒன்றை பிடித்து அதனை துன்புறுத்தும் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நம் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மிருகங்களை துன்புறுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கின்றது. மனிதர்கள் விலங்குகளை கடுமையாகத் தாக்கி வருகின்றனர். யானை, நாய்கள், குதிரைகள், ஆடு மாடு போன்ற அனைத்தையும் கொடூரமாக தாக்கும் நிகழ்வுகள் நடந்து கொண்டு இருக்கின்றது .அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடந்துள்ளது. டுவிட்டரில் பர்வீன் தபாஸ் என்று நடிகர் ஒரு வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் ராஜநாகம் ஒன்றை இளைஞர்கள் சிலர் சேர்ந்து துன்புறுத்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
We need more #Wildlife education…I think this is a King Cobra…@ParveenKaswan @Jayanth_Sharma pic.twitter.com/sUapI13SUM
— Parvin Dabas (@parvindabas) June 22, 2021
சாலை ஓரமாக உள்ள வனப்பகுதியில் இருந்து ராஜநாகம் ஒன்றை இழுத்து வந்த இளைஞர்கள் அதனை சாக்குப் பையில் வைத்து காலால் மிதித்து மோசமாக தாக்கும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது. இந்த நிகழ்வு அனைத்தும் கோவாவில் நடைபெற்று உள்ளது. மக்களுக்கு வனம் குறித்து வன விலங்குகள் குறித்து போதுமான விழிப்புணர்வு அளிக்க வேண்டும். விலங்குகளும் நம்மைப்போல் ஒரு உயிர்கள் தான் என்பதை மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் அவர்களை திட்டி பதிவிட்டு வருகின்றனர். இதையடுத்து இந்த சம்பவம் வனத்துறையினரின் கவனத்திற்குக் கொண்டு வரவே, அந்த ராஜநாகத்தை பத்திரமாக மீட்ட அவர்கள் வனப்பகுதிக்குள் கொண்டு அதை விட்டு விட்டனர். அதுமட்டுமில்லாமல் அந்த விலங்கை கொடுமை படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.