தமிழகம் முழுவதும் கொரோணா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் பொருளாதார ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு மத்தியில் அத்தியாவசியப் பொருட்கள் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி வரலாறு காணாத அளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்துள்ளது. இன்று மீண்டும் விலை உயர்ந்த நிலையில் தமிழகத்தில் 21 மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ளது.
இந்நிலையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தி பொதுமக்கள் மீது கடும் தாக்குதலை பாஜக அரசு நிகழ்த்தியுள்ளது. அனைத்து வகையிலும் மக்கள் நலனுக்கு விரோதமாக செயல்படுகின்ற மத்திய அரசுக்கு பாடம் புகட்டும் வகையில் ஜனநாயகம், மதசார்பின்மை மற்றும் சமூக நீதி ஆகிய கொள்கைகளில் நம்பிக்கை உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஓரணியில் திரண்டு போராட்ட வியூகங்களை வகுக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.