தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கும் சூழலில், மக்களுக்கு சற்று குளிர்ச்சியூட்டும் விதமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஜூன் மூன்றாம் தேதி முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வெப்பச்சலனம் காரணமாக இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரத்தில் கன மழை பெய்யலாம். நாளை சேலம், கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.