Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

கடைசியாக எழுதிவைத்த கடிதம் …. விசாரணையில் வெளிவந்த உண்மை …. கணவர் உட்பட 3 பேர் கைது …!!!

 இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவர், மாமியார் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருமுல்லைவாயில் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலமுருகனுக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜோதிஸ்ரீ என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் கணவன் – மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதால் மனைவி ஜோதிஸ்ரீ கணவர் பாலமுருகனை விட்டு பிரிந்து சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் அவருடைய சர்டிபிகேட் மற்றும் துணிமணிகளை எடுக்க கணவர் வீட்டிற்கு வந்துள்ளார். ஆனால் அவரது மாமியார் அம்சா  இவரை  உள்ளே விட மறுத்து விட்டார். இதனால் மாடியில் உள்ள வீட்டில் ஜோதிஸ்ரீ  தங்கியிருந்தார். இந்நிலையில் இவர்  தங்கியிருந்த வீட்டுக்கு செல்லும் மின்சாரத்தை மாமியார் துண்டித்ததால் மிகுந்த விரக்தியடைந்த ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதற்கு முன்பாக தனது தற்கொலைக்கு கணவர் ,மாமியார் இருவரும் தான் காரணம் என்று கடிதம் எழுதி வைத்ததுடன் உறவினர்களிடம் வீடியோ காலில் பேசி இந்த தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருமுல்லைவாயில் போலீசார் வழக்குப்பதிவு செய்து  விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்தது . இந்த விசாரணையில் ஜோதிஸ்ரீ -யின் தற்கொலைக்கு காரணமாக இருந்த  கணவர் பாலமுருகன், மாமியார் அம்சா மற்றும் பாலமுருகனின் அண்ணன் சத்யராஜ் ஆகிய  3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |