தங்களிடம் இருக்கும் நெல்களை அரசு நிலையம் வாங்காததால் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு நெல் வாங்கும் நிலையத்திற்கு விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் சென்ற ஒரு மாதத்திற்கு மேலாக அரசு நிலையத்திற்கு விவசாயிகளிடமிருந்து நெல் வழங்கப்பட்டு வந்துள்ளது. இதனையடுத்து வியாபாரிகளிடமிருந்து அரசு நிலையம் நெல்களை வாங்க போவதாக விவசாயிகளுக்கு தெரியவந்துள்ளது
இதனை தொடர்ந்து அப்பகுதிகளில் சுற்றியுள்ள விவசாயிகள் நெல் வாங்கும் நிலையத்தில் முற்றுகையிட்டு லாரியில் இருந்து நெல் மூட்டைகளை இறக்கவிடாமல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் விவசாயிகளிடம் நெல் வாங்காமல் வியாபாரிகளிடம் வாங்குவது எந்த விதத்தில் நியாயம் என அவர்கள் கோஷமிட்டுள்ளனர்.
இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அதன்பின் விவசாயிகளிடமும் நெல் வாங்கப்படும் என அறிவித்த பின்பு அங்கிருந்து அவர்கள் கலைந்து சென்றுள்ளனர். மேலும் அப்பகுதியில் விவசாயிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி சிறிது நேர பரபரப்பில் காணப்பட்டுள்ளது.