இளம்பெண் மாற்றுத்திறனாளியை திருமணம் செய்வதாக கூறி 3 லட்சம் ரூபாயை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம் பகுதியில் கிறிஸ்டல் ஆனந்த் என்ற பட்டதாரி வாலிபர் வசித்து வருகிறார். இவருக்கு பிறப்பிலேயே வலது கை இல்லாத மாற்றுத்திறனாளியாக பிறந்துள்ளார். இந்நிலையில் கிறிஸ்டல் ஆனந்த் ஆச்சாரிப்பள்ளம் பகுதியில் இருக்கும் அரசு மருத்துவமனையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சிகிச்சை எடுத்து வந்த தனது நண்பரை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது கிறிஸ்டல் ஆனந்த் அந்த மருத்துவமனையில் லேப்டெக்னிசியனாக பயிற்சி பெற்று வந்த ஒரு பெண்ணுடன் நட்பாக பழகி உள்ளார். அதன் பின் நாளடைவில் இவர்களது நட்பு காதலாக மாறியது.
இதனையடுத்து அந்த பெண் கிறிஸ்டல் ஆனந்தை திருமணம் செய்வதாக கூறி கிறிஸ்டல் ஆனந்திடம் இருந்து 3 லட்சம் ரூபாய் வாங்கியிருக்கிறார். அதன்பின் சில நாட்களாக கிறிஸ்டல் ஆனந்திடம் பேசுவதை அந்த பெண் தவிர்த்து வந்துள்ளார். இதனையடுத்து ஆனந்த் அந்த பெண்ணிடம் வாங்கிய பணத்தை திருப்பி தரும்படி கேட்டுள்ளார். அதற்கு அந்த பெண் பணத்தை தர முடியாது என்று கூறியதால் மன உளைச்சலில் இருந்த கிறிஸ்டல் ஆனந்த் தனது 3 லட்சம் ரூபாயை வாங்கி தரும்படி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.