கோவிலுக்குள் நுழைந்து நகைகளை திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர் .
திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு அருகில் உள்ள திருமணம் கிராமத்தில் தாத்ரீஸ்வரர் கோவில் உள்ளது . இந்தக் கோவிலின் பரம்பரை அறங்காவலராக யுவக்குமார் என்பவர் உள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இந்தக் கோவிலுக்குள் உள்ள நகைகள் மற்றும் சொத்துக்களை கொள்ளையடிக்க 8 பேர் நுழைந்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த கோவில் அறங்காவலர் மற்றும் அப்பகுதி மக்கள் ஆகியோர் விரைந்து சென்று திருடர்களை பிடிக்க விரட்டிச் சென்றனர்.
அந்தத் திருடர்களில் 4 பேரை கிராம மக்கள் மடக்கி பிடித்தனர். மேலும் 4 பேர் தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவம் குறித்து அறங்காவலர் யுவக்குமார் வெள்ளவேடு போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கோவிலுக்குள் நுழைந்து நகை மற்றும் சொத்துக்களை திருட முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.