Categories
உலக செய்திகள்

ஒரே பரிசோதனையில் எந்த புற்றுநோயையும் கண்டறியலாம்.. விஞ்ஞானிகள் அசத்தல் கண்டுபிடிப்பு..!!

புற்றுநோயை எளிதாக ஒரே ரத்தப் பரிசோதனையில் கண்டறியும் முறையை  ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

“கேலரி” என்ற எளிதான ரத்த பரிசோதனையினால், 50க்கும் அதிகமான பல வகை புற்றுநோய்களை கண்டறியலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள். அறிகுறிகள் தோன்றுவதற்கு முன்பாகவே கண்டுபிடித்துவிடலாம் என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் GRAIL என்ற நிறுவனம் தான் இந்த ஆய்வை தொடங்கி தேவையான நிதியை அளித்திருக்கிறது.

மேலும் இந்த பரிசோதனை கருவியை அமெரிக்காவின் மருந்து கடைகளில் கொண்டு வந்திருக்கிறது. இதன் மூலம் நுரையீரல், மார்பகம், கர்ப்பப்பை வாய், குடல் மற்றும் புரோஸ்டேட் புற்று நோய்கள் போன்றவற்றை கண்டறிய உதவுகிறது. சுமார் 1,34,000க்கும் அதிகமான மக்கள்  இந்த ரத்த பரிசோதனையில் கலந்து கொண்டனர்.

இப்பரிசோதனை மூலம் புற்றுநோய் உடலில் எந்த பகுதியில் இருக்கிறது என்று கண்டறிந்து விடலாம். இதன் மூலம் புற்றுநோய் இருப்பதற்கான அறிகுறியும், இருக்கும் இடத்தையும்  துல்லியமாக காட்டிவிடும் என்று GRAIL-ன் தலைமை மருத்துவ அதிகாரி மற்றும் வெளி விவகாரங்களின் தலைவராகவும் இருக்கும் Dr.ஜோசுவா ஆஃப்மேன் கூறியிருக்கிறார். மிகக்கொடிய புற்று நோய்களை தொடக்கத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் பல உயிர்கள் காப்பாற்றப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |