Categories
அரசியல் திருநெல்வேலி மாநில செய்திகள்

திமுக வேண்டாம் ”காங்கிரஸ் தனித்து போட்டி” நாங்குநேரியில் KS அழகிரி ஆதங்கம்…!!

நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினரின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

நாங்குநேரி , விக்கிரவாண்டி ஆகிய இரண்டு சட்டமன்ற தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்றும் பேசப்படும் நிலையில் நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியினர் முன்பாக ஆலோசனை கூட்டத்தில் கே எஸ் அழகிரி பேசி வருகிறார். நாங்குநேரியில் ஏற்கனவே சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட வசந்தகுமார் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்றத் இதில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி காலியாக இருக்கிறது. அதில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுமா ?  திமுக போட்டியிடுமா ?  என்ற கேள்வி எழுப்பி வரும் நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியினர் முன்பாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றார்.அதில் , 50 ஆண்டுகளாகவே எதிர்க் கட்சியாக இருப்பது ஏன் ? நம்மால் எதற்காக ஆளுங்கட்சியாக வர முடியவில்லை.

கூட்டணி இல்லாமல்  காங்கிரஸ் வெற்றி பெற முடியாதா என்று கேள்வி எழுப்பிய KS அழகிரி குறைந்தபட்சம் தெருவில் நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற முடியாதா என ஆராய வேண்டும். வாக்குச்சாவடியை கைபற்ற  முடியாவிட்டாலும் பாதுகாக்கும் ஆற்றல் காங்கிரஸ் கட்சிக்கு இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக் கட்டுப்பாடு இல்லாத இயக்கமாக இருக்கிறது.

நாங்குநேரியில் காங்கிரஸ் மேடையை கூட சரிசெய்ய முடியாத நிலையில்தான் கட்சி இருக்கிறது.  கன்னியாகுமரி , நெல்லை , தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி பலமாக இருந்தும் காங்கிரஸ் தனித்து வெற்றி பெற முடியாதா என்று விவாதிக்கவே செயல்வீரர் கூட்டம் நடைபெறுவதாக கே எஸ் அழகிரி தெரிவித்தார். இதனால் நாங்குநேரியில் திமுக நின்றாலும் அவர்களை எதிர்த்து காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என்று தெரிகின்றது.

Categories

Tech |