Categories
உலக செய்திகள்

“என் 3 வயது மகனுக்கு புரிய வைக்க முடியாது!”.. மகாராணியை நெகிழ வைத்த இராணுவ வீராங்கனை..!!

பிரிட்டன் மகாராணியார் பிற நாடுகளில் பணியாற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கும் ஒரு நிகழ்ச்சியில் காணொலி காட்சி வாயிலாக பங்கேற்றுள்ளார்.

பிரிட்டன் மகாராணியார் Canadian Armed Forces Legal Branch என்ற ராணுவ வீரர்கள் அமைப்பிற்கு Royal Banner என்ற கௌரவத்தை வழங்கி சிறப்பித்திருக்கிறார். அப்போது தன் சொந்த நாட்டிலிருந்து வெளியேறி, அரேபிய வளைகுடாவில் உள்ள பக்ரைனில் பணியாற்றும்  இராணுவ வீராங்கனையான Major Angela Orme யுடன் பேசினார்.

ஏஞ்சலா கடந்த ஏழு மாதங்களாக தன் இரு குழந்தைகளையும் பிரிந்து வெளிநாட்டில் பணியாற்றுவதை அறிந்த மகாராணியார், உங்கள் குழந்தைகளை அதிகமாக தேடுவீர்கள் தானே? என்று கேட்டிருக்கிறார். அதற்கு பதிலளித்த, ஏஞ்சலா ஆமாம் என் குழந்தைகளை பிரிந்திருப்பதை மிகவும் அதிகமாக உணர்வேன் என்று கூறினார்.

மேலும் அவர் கூறுகையில் என்றாவது ஒரு நாள் தன் அம்மா தங்களைவிட்டு பிரிந்து ஏன் இவ்வளவு தொலைவில் சென்றிருக்கிறார் என்று என் குழந்தைகள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள். அப்போது அவர்கள் தாயை நினைத்து பெருமைக்கொள்வார்கள் என்று கூறினார். என் குழந்தைகள் நான் இங்கு மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்று கருதுகிறார்கள்.

ஏனெனில், “மூன்று வயதே ஆகும், என் மகனுக்கு என் பணி குறித்து புரிய வைக்க முடியாது. அவனிடம் கடற்கொள்ளையர்களுடன் நான் சண்டையிடுவேன் என்று கூறுவேன். அது நல்ல செயல் என்று அவன் நம்பிக்கொண்டிருக்கிறான்” என்று கூறியுள்ளார். இதை கேட்டவுடன் நெகிழ்ச்சியடைந்த மகாராணி அருமையான பதில், ஏனெனில் அதுவும் ஒரு வகையில் உண்மை தானே! என்று கூறினார்.

பிரிட்டன் மகாராணி, வட அமெரிக்க நாடான கனடாவின் ராணுவத்தினருக்கு விருது கொடுக்க என்ன காரணம்? என்று குழம்புபவர்களுக்கு, பிரிட்டன் மகாராணி தான் கனடாவின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |