கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து வங்காளதேசத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது .
வங்காளதேசத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து காணப்படுகிறது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 108 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மீண்டும் அந்நாட்டில் நாடு தழுவிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வகை வைரஸ் பாதிப்பு அந்நாட்டின் பரவியிருப்பதால் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நாடு தழுவிய முழு ஊரடங்கு மறு அறிவிப்பு வரும் வரை அமலில் இருக்கும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி வழக்கப்பட்டுள்ள நிலையில் வேறு எதற்கும் அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளது.