Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

என்னது கல்யாணம் ஆயிடுச்சா… அதிர்ச்சி அடைந்த இளம்பெண்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

திருமணம் ஆகாத பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி கர்ப்பமாக்கியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வலசைப்பட்டி பகுதியில் பாலசுப்ரமணியன் என்பவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்துவருகிறார். இந்நிலையில் இவர் திருமணம் ஆகாத இளம் பெண்ணை ஏமாற்றி காதலித்து வந்துள்ளார். மேலும் அந்தப் பெண்ணிடம் ஆசை வார்த்தைகள் கூறி பாலசுப்ரமணியம் அவரை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனையடுத்து தற்போது கர்ப்பமாக இருக்கும் அந்தப் பெண் பாலசுப்பிரமணியனிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அதற்கு பாலசுப்பிரமணியம் மறுப்பு தெரிவித்ததால் அவருக்கு ஏற்கனவே திருமணமான உண்மை அந்த இளம்பெண்ணுக்கு தெரியவந்துள்ளது. அதன்பின் அந்தப் பெண் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று பாலசுப்பிரமணியன் மீது புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலசுப்பிரமணியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |