தனுஷ் நடிப்பில் வெளியான ஜகமே தந்திரம் திரைப்படம் புதிய சாதனை படைத்துள்ளது.
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் உருவான ஜகமே தந்திரம் திரைப்படம் கடந்த ஜூன் 18-ஆம் தேதி நேரடியாக நெட்பிலிக்ஸில் வெளியானது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருந்த இந்த படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ், ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். மேலும் 16 மொழிகளில் 190 நாடுகளில் இந்த படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ‘ஜகமே தந்திரம்’ உலக அளவில் அதிக பார்வையாளர்களை பெற்ற திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.