Categories
உலக செய்திகள்

நடந்து சென்றவர்களை குத்திக்கொன்ற இளைஞர்.. மக்களின் துணிச்சல்.. பரபரப்பு வீடியோ வெளியீடு..!!

ஜெர்மனியில் சோமாலிய நாட்டைச் சேர்ந்த இளைஞர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

பவேரியாவில் இருக்கும் Wurzburg என்ற நகரத்தில் நேற்று மாலையில் சுமார் 5 மணிக்கு சோமாலி நாட்டை சேர்ந்த 24 வயது இளைஞர் கத்தியுடன் வந்து நடந்து சென்று கொண்டிருந்த மக்களை  குத்தியுள்ளார். இதில் மூவர் உயிரிழந்ததுடன் 6 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் 5 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆச்சர்யமான விஷயம் ஒன்று நடந்துள்ளது. அதாவது அந்த நபர் கையில் கத்தி வைத்திருந்தும், பொதுமக்கள் தைரியமுடன் அவரை பிடித்துவிட்டனர். கையில் கிடைத்த பொருட்களையெல்லாம் அந்த நபர் மீது வீசியுள்ளனர். எனவே அந்த நபரை ஓட விடாமல் தடுக்க காவல்துறையினர் வரும் வரை மக்கள் போராடியுள்ளனர்.

இச்சம்பவம் நடந்த போது அங்கு நின்ற நபர்கள், அந்த இளைஞர் அல்லாஹுஅக்பர் என்று கூச்சலிட்டதாக கூறியுள்ளார்கள். எனினும் அவர் பயங்கரவாத தாக்குதலில் தொடர்புடையவர்  இல்லை என்று கருதுவதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.

அந்த நபர் எதற்காக திடீரென்று தாக்குதல் நடத்தினார் என்பது தெரியவில்லை. எனவே ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் அந்த நபரின் காலில் துப்பாக்கியால் சுட்டனர். அதன் பின்பே அவரை பிடிக்க முடிந்தது. தற்போது அவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Categories

Tech |