விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள கோடியில் ஒருவன் படத்தின் 3-வது பாடல் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கோடியில் ஒருவன். இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கியுள்ள இந்த படத்தில் ஆத்மிகா கதாநாயகியாக நடித்துள்ளார் . இந்த படம் கடந்த மே மாதம் 14-ஆம் தேதி ரிலீஸாக இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
Happy to announce that #KodiyilOruvan – 3rd single track " Slum Anthem" releasing on June 28th.
More updates very soon..
A @akananda Film@im_aathmika @nsuthay @nivaskprasanna @chendurfilm @FvInfiniti @saregamasouth @RIAZtheboss @CtcMediaboy pic.twitter.com/XRzlF86fUn
— vijayantony (@vijayantony) June 26, 2021
மேலும் இந்த படத்தின் டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் கோடியில் ஒருவன் படத்தின் 3-வது பாடல் வருகிற ஜூன் 28-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .