Categories
மாநில செய்திகள்

நாளை மறுநாள் 27 மாவட்டங்களில்…. 9,333 பேருந்துகள் இயக்கம் – போக்குவரத்துத்துறை…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து 28 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில் மேலும் ஜூலை-5 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நாளை மறுநாள் முதல் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட 4 மாவட்டங்களுடன், கூடுதலாக 23 மாவட்டங்களில் பேருந்து சேவைக்கு  அனுமதியளித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து 27 மாவட்டங்களில் பயணிக்க ஏதுவாக 9,333 பேருந்துகள் இயக்கப்படுவதாக  போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.

Categories

Tech |