கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்திக் கொண்டவர்களும் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த இயக்குநர் கூறியுள்ளார்.
தற்போது கொரோனா வைரசின் உருமாறிய டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் மிக வேகமாக பரவி வருவதால் கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ் செலுத்தி கொண்டவர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.இதனால் மக்கள் காற்றோட்டமான இடங்களில் செல்லும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பின் மூத்த இயக்குநரான மேரி ஏஞ்சலா சிமாவோ கூறியுள்ளார் .
இதுகுறித்து ஜெனீவாவில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறும்போது, மக்கள் கூட்டமான இடங்களை தவிர்க்கவும் ,சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றார். மேலும் தற்போது டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாகவும் , இன்னும் பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படவில்லை என்பதால் இந்த டெல்டா வைரஸ் பெருமளவு ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் மக்களை எச்சரித்தார்.