அமெரிக்காவில் 60 வயது முதியவர் 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த 60 வயது முதியவரான ராபர்ட் பிலிப்ஸ் என்பவர் 11 வயது சிறுமி ஒருவரின் வீட்டில் சில காலமாக தங்கியிருந்த நிலையில் அவரை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ராபர்ட் பிலிப்ஸ் அந்த சிறுமியிடம் துப்பாக்கியை காட்டி இந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் உன் பெற்றோரை கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார். இதையடுத்து சில நாட்கள் கழித்து அந்த சிறுமி ராபர்ட் பிலிப்ஸால் சீரழிக்கப்பட்ட சம்பவம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது.
மேலும் இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் ராபர்ட் பிலிப்ஸ் காவல்துறையினரிடம் பிடிபடாமல் அங்கிருந்து தப்பி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்குப்பதிந்த காவல்துறையினர் அந்த முதியவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.