நடிகர் ரஜினிகாந்த் தன் உடலை பரிசோதனை செய்வதற்காக அமெரிக்காவிற்கு சென்ற போது எடுத்த புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த்திற்கு கடந்த 2016 ஆம் வருடத்தில் மே மாதம் சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. அதன் பின்பு அமெரிக்காவில் உள்ள ராசெஸ்டர் என்ற நகரத்தில் இருக்கும் மயோ கிளினிக் மருத்துவமனையில் சிறந்த மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்.
A long shot but #Thalaivar Swag in USA #Rajinikanth #Annaatthe pic.twitter.com/pqYMZVMWrN
— Thalaivar Designers Team ᴶᴬᴵᴸᴱᴿ (@TDT_RajiniEdits) June 25, 2021
இம்மாதம் 19ஆம் தேதியன்று அதிகாலை ரஜினிகாந்த், தன் மனைவி லதாவுடன் விமானத்தில் அமெரிக்கா சென்றடைந்தார். அங்கு மயோ கிளினிக் மருத்துவமனையில் ரஜினிகாந்திற்கு உடல்நலக் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்பு அவரது மகள் ஐஸ்வர்யா மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார்.
அந்த புகைப்படம் இணையதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. பரிசோதனைக்கு பிறகு அமெரிக்காவில் 21 நாட்கள் ரஜினிகாந்த் தங்கியிருப்பார். அதன்பின்பு சென்னைக்கு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.