தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்க வலியுறுத்தி 12 கோவில்கள் முன்பு நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் இந்து முன்னணியினர் சார்பில் கோவில்களை திறக்ககோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து டாஸ்மாக் கடைகளை திறக்க அனுமதி அளித்த அரசு கோவில்களையும் திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தமிழகம் முழுவதிலும் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இந்நிலையில் தேனி மாவட்டத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணி மாவட்ட பொதுச் செயலாளர் முருகன், மாவட்ட செயலாளர் எஸ்.பி.எம் செல்வம், தெற்கு மாவட்ட செயலாளர் மாயலோகநாதன் உட்பட பல நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் சுப்ரமணிய சுவாமி கோவில், கம்பம் கவுமாரியம்மன் கோவில், சந்தை மாரியம்மன் கோவில், சோலைமலை அய்யனார் கோவில், சக்கரம்பட்டி முத்துமாரியம்மன் கோவில், பெரியகுளம் பெருமாள் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், காளியம்மன் கோவில், தெப்பம்பட்டி மாவூற்று வேலப்பர் கோவில் என மொத்தம் 12 கோவில்களில் முன்பு இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.