தமிழகத்தில் மருத்துவ நுழைவு தேர்வுக்கான நீட் தேர்வை ரத்து செய்யும்படி பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு நீட் தேர்வின் தாக்கம் என்ன என்பது குறித்து சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளதாக முன்னதாக ஏ.கே ராஜன் தலைமையிலான குழு தகவல் தெரிவித்தது. இந்நிலையில் தமிழ்நாட்டின் நீட் தேர்வு 100% ரத்து செய்யப்படும் என்று அமைச்சர் சுப்பிரமணியன் உறுதியளித்துள்ளார்.
திமுகவை பொறுத்தவரை நீட் தேர்வு என்பது கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என்று கூறியுள்ளார். மேலும் மாணவர்கள் பயிற்சிக்கு செல்வதை தடுத்து ஒருவேளை காலதாமதம் ஏற்பட்டால் எதிர்காலம் பாதிக்கப்படும். நீட் எதிர்ப்பு தீர்மானம் குடியரசுத் தலைவருக்கு சென்றால் அது ஒப்புதலோடு தான் திரும்பும் என்று தெரிவித்துள்ளார்.