Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை நயன்தாராவின் அடுத்த படத்தில் இத்தனை பாடல்களா?… இசையமைப்பாளர் யாருன்னு பாருங்க…!!!

இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் உருவாகவுள்ள பாட்டு படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாராவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . தற்போது இவர் அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நெற்றிக்கண் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இதை தொடர்ந்து நடிகை நயன்தாரா சில புதிய திரைப்படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க உள்ளார் .

പ്രേമത്തിനു ശേഷം പുതിയ സിനിമയുമായി അൽഫോൺസ് പുത്രൻ; നായകൻ ഫഹദ് -Alphonse  Puthren New Film With Fahadh Faazil

பாட்டு என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரபல மலையாள நடிகர் பகத் பாசில் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தில் மொத்தம் 11 பாடல்கள் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |