விவசாயிகள் தங்களது போராட்டங்களை முடித்துக்கொள்ள வேண்டும் என்று வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.
அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் கடந்த நவம்பர் 27 ஆம் தேதியில் இருந்து போராடி வருகின்றன. இந்த போராட்டமானது இன்றுடன் ஆறு மாதங்களை நிறைவு செய்து நாளை ஏழாவது மாதத்திற்கு அடியெடுத்து வைக்கின்றது. வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது. இருப்பினும் அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்தது. இதையடுத்து விவசாயிகள் தொடர்ந்து தங்களது போராட்டங்களை நடத்தி வருகின்றன.
ஏழாவது மாதத்திற்குள் அடியெடுத்து வைக்கும் இந்த போராட்டத்தை முன்னிட்டு விவசாயிகள் சார்பில் டிராக்டர் பேரணி நடைபெற உள்ளது. “விவசாயத்தை காப்போம் ஜனநாயக நாளை காப்போம்” என்ற தலைப்பில் டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. இதில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த போராட்டம் தொடர்பாக டெல்லி எல்லைப் பகுதிகளான சிங்கு, திக்ரி, காசியாபாத் ஆகிய பகுதிகளில் மும்முரமாக வேலைகள் நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: “விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த விவசாயம் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும், நாட்டின் பெரும் பிரிவினர் இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து உள்ளனர் எனவும் கூறியுள்ளார். மேலும் விவசாயிகள் போராட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.