உலக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
பிரேசிலில் நடந்த உலக கோப்பை விளையாட்டு போட்டியில் கடந்த ஆகஸ்ட் 29-ஆம் தேதி நடைபெற்ற உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் தமிழக வீராங்கனையான கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயதான இளவேனில் வாலறிவன் கலந்து கொண்டார். சீனியர் உலகக் கோப்பையில் அடியெடுத்து வைத்த முதல் ஆண்டிலேயே இளவேனில் 251.7 புள்ளிகள் பெற்று தங்க பதக்கத்தை வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவருக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை, திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்த்தனர். இந்நிலையில் உலக்கோப்பை துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இளவேனில் வாலறிவன் டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். மேலும் உலக கோப்பையில் தங்கம் வெள்ளி வென்ற வீரர்களும் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன்பின் மொத்தமாக நின்று வீரர்கள் அனைவரும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.