Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பிடிக்க பிடிக்க வந்துட்டே இருக்கு… அதிரடி சோதனையில் போலீசார்… மேலும் 3 பேர் கைது…!!

நாமக்கல் மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் வைத்து மதுபாட்டில்களை கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி காவல்துறையினர் சாமியாபுரம் கூட்ரோடு சோதனை சாவடியில் வைத்து வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அப்பகுதியாக வந்த காரை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர், அப்போது காரில் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து மதுபாட்டிலை கடத்தியது திருச்செங்கோட்டை சேர்ந்த வெங்கடாசலம்(40) மற்றும் பிரகாசம்(41) என்பது தெரியவந்துள்ளது. மேலும் இருவரை கைது செய்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 910 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

இதனையடுத்து மொரப்பூர் பகுதியில் இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அப்பகுதி வழியாக மொபட்டில் வந்த நபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அதில் அவர் பில்பருத்தி பகுதியில் வசிக்கும் பெரியசாமி(45) என்பது தெரியவந்துள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் விற்பனைக்காக வைத்திருந்த 25 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் பெரியசாமியையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |