மறைந்த இளவரசர் பிலிப் உருவம் பதிக்கப்பட்ட புதிய நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.
இளவரசர் பிலிப்பின் கடந்த ஏப்ரல் மாதம் உடல்நலக்குறைவால் காலமானார். இவரை நினைவு கூறும் வகையில் பிரிட்டன் கருவூலம் சிறப்பு நாணயத்தை வெளியிட்டுள்ளது. இந்த 5 பவுண்டு மதிப்புள்ள நாணயத்தில் இளவரசர் பிலிப் உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயத்திற்கு கடந்த 2008ஆம் ஆண்டு இளவரசர் பிலிப் ஒப்புதல் அளித்துள்ளதாக கருவூலம் கூறியுள்ளது. இந்த நாணயத்தில் கலைஞர் இயன் ரேங்க்-பிராட்லி வரைந்த இளவரசரின் உருவப்படம் இடம்பெற்றுள்ளது. அதோடு இந்த நாணயத்தில் “HRH The Prince Philip, Duke of Edinburgh 1921-2021″ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.
மறைந்த இளவரசர் பிலிப் கடற்படையில் இருந்ததால் ஆயுதப்படை தினமான நேற்று இவரின் உருவம் பதிக்கப்பட்ட இந்த சிறப்பு நாணயம் வெளியிடப்பட்டுள்ளது.இந்த நாணயம் ராயல் மிண்ட் வலைத்தளம் , இங்கிலாந்தில் உள்ள தபால் நிலையங்கள் , காமன்வெல்த் மற்றும் உலகெங்கிலும் உள்ள பங்குதாரர்களிடம் இருந்தும் விற்பனைக்கு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருவூலத் தலைவர் ரிஷி சுனக் கூறும்போது ,”இந்த நாணயம் எடின்பர்க் டியூக் இளவரசர் பிலிப்க்கு ஒரு பொருத்தமான அஞ்சலி ஆகும் .அவர் உலகெங்கிலும் பல மக்களை ஊக்கப்படுத்தினார் .மேலும் அவர் தேசத்திற்கும் , அவரது கம்பீரமான ராணிக்கும் தனது பல மகத்தான சேவையை புரிந்தார்” என்று அவர் கூறினார் .