தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று திமுக 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சியைப் பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஸ்டாலின், மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசில் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. கொரோனா பேரிடர் காலத்தில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் நேற்று #kolathur visit- இல் பொதுமக்களிடமும் நல சங்கங்களிடம் மனுக்களை பெற்று, “எதிர்க்கட்சி உறுப்பினராக எப்படி சீரிய முறையில் பணியாற்றினேனோ, அதைவிட பலமடங்கு பணிகளை கொளத்தூர் மக்களுக்காக நிறைவேற்றுவேன்” என்று உறுதி அளித்தேன். மக்கள் பிரதிநிதிகள் மக்களைத் தேடிச் செல்லவேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.