நடிகை டாப்ஸி தான் விளையாட்டு துறை படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சிறந்த நடிகைகளில் ஒருவர் டாப்சி. இவருக்கு விளையாட்டு சம்பந்தமான படங்களில் நடிக்க அதிகமாக வாய்ப்புகள் வந்த வண்ணம் உள்ளது. இவர் ‘சூர்மா’ என்ற இந்தி படத்தில் ஹாக்கி வீராங்கனையாகவும், ‘சாத் கி ஆங்க்’ படத்தில் துப்பாக்கி சுடும் வீராங்கனையாகவும், ‘ராஷ்மி ராக்கெட்’ என்ற படத்தில் தடகள வீராங்கனையாகவும் என தொடர்ந்து விளையாட்டுதுறை படங்களிலே நடித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கேப்டன் மித்தாலி ராஜ் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து நடிகை டாப்சி கூறுகையில், ‘எனக்கு வரும் படங்கள் நல்ல படங்களாக இருக்கிறது. அதனால் அவற்றை தவற விடுவதில்லை என்றும் இன்றைய நிலையில் எனக்கு வரும் வாய்ப்புகளை தேர்வு செய்து நடிக்கும் நிலையில் நான் இருக்கிறேன் என்றும் என்னை தேடி வரும் படங்களில் நல்ல கதை அம்சமுள்ள படங்கள் எதுவும் என் கையை விட்டு நழுவிப் போய் விடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்’ என்றும் கூறியுள்ளார்.