நிலம் தகராறு காரணத்தால் பெண் உட்பட 2 பேரை கத்தியால் குத்திய சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் வயக்காடு பகுதியில் நடராஜன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் சொந்தமான நிலம் உள்ளது. இந்த நிலத்தால் இவருக்கும் இவரின் அண்ணன் பழனிச்சாமிக்கு மற்றும் அக்காள் ராஜம்மாளுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ராஜம்மாள் அந்த நிலப் பகுதியில் குப்பைகளை கொட்டியதினால் அதற்கு நடராஜன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன் பின் அவர்களை அருகில் இருந்தவர்கள் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து இரவு நேரத்தில் இவர்களுக்கு இடையே நிலம் குறித்த மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த பழனிச்சாமி, அவரின் உறவினர் மகேந்திரன் மற்றும் 5 பேர் கொண்ட கும்பல் இணைந்து நடராஜனையும் அவரின் மனைவி மனோன்மணியையும் மற்றும் உறவினர் கார்த்திக் ரூபன் போன்றோரை கத்தியால் குத்தியுள்ளனர்.
அதில் 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பிரபாகரன், பழனிச்சாமி, மகேந்திரன் என 3 பேரையும் கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவாக இருக்கும் இரண்டு பேரை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.