நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 94 கோடி பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளதால் 2 தவணை தடுப்பூசி செலுத்த 188 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது. டிசம்பருக்குள் 133 கோடி தடுப்பூசிகள் கிடைக்கும் என்பதால் டிசம்பருக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும் என தெரிவித்துள்ளது.