Categories
உலக செய்திகள்

அடேங்கப்பா…! இப்படி ஒரு கண்காட்சியா…? பெருமிதம் கொள்ளும் பொதுமக்கள்…. அரண்மனை நிர்வாகம் வெளியிட்ட முக்கிய தகவல்….!!

தன்னுடைய 99 வயதில் மறைந்த இளவரசர் பிலிப்பின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் விதமாக வின்ஸ்டர் மாளிகையில் அமைக்கப்பட்டிருக்கும் கண்காட்சியை பொதுமக்கள் செப்டம்பர் 20ஆம் தேதி வரை பார்வையிடலாம் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து நாட்டின் 2 ஆம் ராணியான எலிசபெத்தின் கணவர் தன்னுடைய 99 ஆவது வயதில் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் மறைந்த இளவரசர் பிலிப்பின் 100 ஆவது பிறந்த நாள் தினத்தையொட்டி வின்ஸ்டர் மாளிகையில் Prince Philip A Celebration என்னும் கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியில் இளவரசர் பிலிப் தன்னுடைய வெளிநாட்டு பயணங்களில் பெற்ற நினைவுச் சின்னங்களும், பரிசுகளும் இடம்பெற்றுள்ளது.

இந்த கண்காட்சியை பொதுமக்கள் அனைவரும் கண்டு பெருமிதம் கொள்கிறார்கள். இதனையடுத்து இளவரசர் பிலிப் தன்னுடைய வாழ்நாளில் சுமார் 14 புத்தகங்களை எழுதியுள்ளதில், சில புத்தகம் இந்த கண்காட்சியில் இடம்பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த கண்காட்சியை செப்டம்பர் 20ஆம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிடலாம் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |