Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதையெல்லாமா திருடுவீங்க… அதிர்ச்சில் அதிகாரிகள்… காவல்துறையினரின் விசாரணை…!!

மின்சார கம்பிகள் மற்றும் ஆயில்களை திருடி சென்றதால் இதை சார்ந்த அதிகாரிகள் அதிர்ச்சில் இருக்கின்றனர்.

சேலம் மாவட்டத்தில் உள்ள வீராணம் மற்றும் சுந்தம்பட்டி பகுதிகளில் 2 மின்சார டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒரு டிரான்ஸ்பார்மரில் இருந்து 200 வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. பின்பு மற்றொரு டிரான்ஸ்பார்மரில் இருந்து 500 ஏக்கர் விவசாய நிலங்களில் அமைந்திருக்கும் பம்பு செட்டுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரவு நேரத்தில் இரண்டு டிரான்ஸ்பார்மர்களிலும் திடீரென மின்தடை ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து காலை நேரம் வரை மின்சார இணைப்பு கொடுக்கப்படாததால் இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை சரி செய்வதற்காக இவர்கள் இருக்கும் பகுதிக்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் அதை பார்த்த போது அதில் 200 லிட்டர் ஆயிலும், 200 கிலோ செம்பு கம்பிகளும்  ஆகியவை திருடு போயிருந்தது தெரியவந்துள்ளது. இதுபற்றி மின்வாரிய உதவி என்ஜினியர் மகேந்திரவர்மன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்தப் புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்துள்ளனர். அப்போது விசாரணையில் டிரான்ஸ்பார்மரில் திருடுவதற்காக 2 பேர் அல்லது அதற்கு அதிகமானவர்கள் கும்பலாக வந்து திருடிச் சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

இதை திருடி செல்வதற்கு ஏதேனும் வாகனத்தை பயன்படுத்தி ஆயில்களையும், செம்புக்கம்பிகளையும் ஏற்றி சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. அதன்பின் டிரான்ஸ்பார்மர் இருந்த பகுதி வனப்பகுதி என்பதினால் ஆட்கள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்டு மின் தடையை ஏற்படுத்தி இந்த திருட்டை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடைய பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த திருடினால் மின்வாரிய அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |