சென்னை மாநகராட்சி மற்றும் ஆலந்துறை மண்டலத்தை சேர்ந்த பொதுமக்கள் குறைகேட்கும் முகாம் நேற்று நடைபெற்றது. இதில் ஆலந்தூர் மற்றும் ஆதம்பாக்கம் பகுதியிலுள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் சென்னை ஆலந்தூர், ஆதம்பாக்கம் பகுதியில் இரண்டு டாஸ்மாக் கடைகள் ஒரு வாரத்தில் மூடப்படும் என அமைச்சர் தா.மோ. அன்பரசன் தெரிவித்துள்ளார். பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று அந்த இரு கடைகளையும் மூடுவதற்கு முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்றப்படும் என்று கூறியுள்ளார்.
Categories