Categories
மாநில செய்திகள்

கடத்தப்பட்ட சிலைகள் தமிழகம் கொண்டு வரப்படும்…. அமைச்சர் அதிரடி…!!!

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் குறிப்பாக கோவிலுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமித்தவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு வருகிறது. மேலும் திருக்கோவில்களில் நடக்கும் குற்றங்களை தெரிவிக்க குறைதீர்ப்பு கட்டுப்பாட்டு அறையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நினையில் செய்தியாளர்களை சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு சிலைகள் தமிழகம் கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்து அறநிலைத்துறை தமிழகம் முழுவதும் உள்ள கோயில் நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இந்த நிலங்களை பிற பணிகளுக்கு தந்து அதில் வரும் வருமானம் மூலம் கோயில் வளர்ச்சிக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |