Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நான் கூப்பிட்டேன் வரவில்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. செங்கல்பட்டில் சோகம்….!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி பகுதியில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சிவானந்தம் பலமுறை அவரது மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை.

இதனால் மனமுடைந்த சிவானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனையடுத்து அருகில் இருப்பவர்கள் சிவானந்த்தை மீட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் நிலையில் அவரை மீட்டு சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவானந்தம் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்.

Categories

Tech |