தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்வுகள் நடத்த படாமலேயே ஆல்பாஸ் அறிவிப்பை அரசு வெளியிட்டது. இந்நிலையில் அடுத்த கல்வி ஆண்டு தொடங்கிவிட்டது. இதற்கு மத்தியில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையவில்லை என்பதால் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தபட உள்ளது.
இருப்பினும் தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? என்று பெற்றோர்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து ஐ.சி.எம்.ஆர், மருத்துவ வல்லுநர்கள் குழு மற்றும் பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்பட உள்ளன. அதன்பிறகு பள்ளி திறப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.