நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல மாநிலங்களும் ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இந்த ஊரடங்கின் காரணமாக பாதிப்பு சற்று குறைந்து வருவதால் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இதனால் வங்கிகள் பகுதி நேரமாக செயல்பட்டு வருகிறது. ஒரு சில மாநிலங்களில் முழு நேரமாகவும் செயல்பட்டு வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஜூலை மாதத்தில் ஏழு நாட்கள் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 4 (ஞாயிறு), ஜூலை 10 (இரண்டாவது சனிக்கிழமை), ஜூலை 11 (ஞாயிறு), ஜூலை 18 (ஞாயிறு), ஜூலை 21(பக்ரீத்), ஜூலை 24 (4வது சனிக்கிழமை), ஜூலை-25(ஞாயிற்றுக்கிழமை) என ஏழு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன.