Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

அரசு நம்ம நல்லதுக்காக தான் சொல்லுறாங்க… தடையை மீறி செயல்படும் சுற்றுலா பயணிகள்… கோரிக்கை விடுத்த பொதுமக்கள்…!!

சுற்றுலா தளத்தில் அரசு தடைகளை மீறி அருவிகளில் குளிப்பதை தடுக்குமாறு மாவட்ட நிர்வாகத்திடம் பொதுமக்கள் கோரிக்கை செய்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு பல மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் அதிகமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் ஒகேனக்கலுக்கு சுற்றுலா பயணிகள் வரக்கூடாது என இம்மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. இதனால் முதலைப்பண்ணை, பேருந்து நிலையம், அருவிகள், நடைபாதை ஆகிய பகுதிகள் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டுள்ளது. இதனையடுத்து கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 10, 400 கன அடி தண்ணீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.

இதனால் ஒகேனக்கல் அமைத்திருக்கும் சீனி பால்ஸ், மெயின் அருவி, ஐந்தருவி ஆகியவைகளில் தண்ணீர் அலைமோதிக் கொட்டியது. ஆனால் தற்போது அப்பகுதியில் நீர்வரத்து படிப்படியாக குறையத் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து  ஒகேனக்கலுக்கு வந்த சுற்றுலா பயணிகள் அரசின் தடைகளை மீறி சினி பால்ஸ் மற்றும் மெயின் அருவிகளில் குளித்துள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகத்திடம் மடம் சோதனைச்சாவடி மற்றும் ஆலம்பாடி பகுதிகளில் அதிக அளவில் பாதுகாப்பை ஏற்படுத்தி சுற்றுலாப்பயணிகளை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |