Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்தியா – இங்கிலாந்து மகளிர் அணி …. ஒருநாள் தொடர் இன்று தொடக்கம் …!!!

இந்தியா – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி இன்று தொடங்குகிறது.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு  டெஸ்ட் போட்டி , 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் அண்மையில்  நடந்த டெஸ்ட்  போட்டி டிராவில் முடிந்தது. குறிப்பாக இந்திய அணியில் களமிறங்கிய அறிமுக வீராங்கனை ஷிபாலி வர்மா இரு இன்னிங்சிலும் அரைசதம் அடித்து விளாசி (96 மற்றும் 63 ரன்) ஆட்டநாயகி விருது பெற்றார். இதையடுத்து இந்தியா-இங்கிலாந்து மகளிர்  அணிகளுக்கு இடையேயான 3 ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று பிரிஸ்டலில் தொடங்குகிறது. டெஸ்ட் போட்டியை தொடர்ந்து ஒருநாள் தொடரிலும் இந்திய  வீராங்கனை ஷிபாலி வர்மா அடியெடுத்து வைக்கிறார். இதற்கு முன்பாக 22  டி20 ஓவர் போட்டிகளில் விளையாடி உள்ள ஷிபாலி வர்மாவை கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் இவரை  சேர்க்காதது விமர்சனத்திற்குள்ளானது. ஆனால் அந்தத் தொடரில் இந்திய அணி 1-4 என்ற கணக்கில் தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்திய அணியில் ஒருநாள் தொடரில் இடம் பெற்றிருக்கும் ஷிபாலி வர்மா இந்த  தொடரிலும் அதிரடி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து ஹீதர் நைட் தலைமையிலான இங்கிலாந்து அணி வலுவாக திகழ்கிறது. இந்த அணியில் டாமி பீமோன்ட், நாட் சிவெர், அமே ஜோன்ஸ்,அன்யா ஸ்ருப்சோலே உட்பட திறமையான வீராங்கனைகள் பலர்  அணியில் உள்ளனர். இந்தப் போட்டி இங்கிலாந்து நடைபெறுவதால் இவர்களுக்கு சாதகமாக இருக்கும் என கருதப்படுகிறது. இதுவரை 69 ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ள இவ்விரு அணிகளில்  இந்திய அணி 30போட்டியிலும் , இங்கிலாந்து அணி 37 போட்டியிலும்  வெற்றி பெற்றுள்ளன. இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்க உள்ள  இந்தப் போட்டியை சோனி டென் 1 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Categories

Tech |