Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நடிகர் சுரேஷ் கோபியின் புதிய படம்… தெறிக்கவிடும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்…!!!

நடிகர் சுரேஷ் கோபி நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

மலையாள திரையுலகில் கடந்த 1986-ஆம் ஆண்டு வெளியான யுவஜனோட்சவம் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் சுரேஷ் கோபி. இதை தொடர்ந்து இவர் பல திரைப்படங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்து வந்தார். மேலும் இவர் தீனா, ஐ உள்ளிட்ட சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் ‌என்பது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் நடிகர் சுரேஷ் கோபி ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இது அவரது 251-வது படமாகும் . ராகுல் ராமச்சந்திரன் இயக்கும் இந்த படத்தை எத்தெரல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் சுரேஷ் கோபி வித்தியாசமான கெட்டப்பில் இருக்கும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை பிரபல மலையாள நடிகர் மோகன்லால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |