பிரிட்டன் சுகாதாரத்துறை மந்திரி கொரோனா விதிமுறைகளை மீறி அலுவலகத்தில் பெண் உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தமிட்ட வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் சமீபத்தில் தான் கொரோனா விதிமுறைகளில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டது. அதற்கு முன்புவரை சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது. எனவே மக்கள் பொதுவெளிகளில் கட்டியணைப்பது, கைகுலுக்குவது போன்றவை தடை செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் சுகாதாரத்துறை மந்திரி, மாட் ஹான்க், சமூக இடைவெளி விதியை மீறியதாக சர்ச்சை எழுந்துள்ளது. அதாவது அவர் தன் அலுவலகத்தில், யாருமில்லாத சமயத்தில், பெண் உதவியாளரை கட்டிப்பிடித்து முத்தமிட்டுள்ளார். அந்த வீடியோ சிசிடிவி கேமராவில் பதிவானது. நாட்டின் பிரபல செய்தி நிறுவனம், அந்த புகைப்படங்களை வெளியிட்டிருக்கிறது.
எனவே, மாட்ஹான்க், தன் செயல்பாட்டிற்கு பொதுமக்களிடமும், பிரதமரிடமும் மன்னிப்பு கேட்டார். எனவே பிரதமர் போரிஸ் ஜான்சன், அவரின் மன்னிப்பு ஏற்றுக் கொள்ளப்பட்டது என்றும் இந்த பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டது என்றும் தெரிவித்திருந்தார். இருப்பினும் அவர், ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தியது. எனவே மாட் ஹான்க், தன் சுகாதார மந்திரி பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்திருக்கிறார்.