Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இன்னும் நிறைய கிடைக்கும்… கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனை பாகம்… தொல்லியல் துறையினரின் தகவல்…!!

தொல்லியல் துறையினர் மேற்கொண்ட அகழாய்வில் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின்  2-வது பாகம் கண்டுபிடிக்கப்பட்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் தொல்லியல்துறையினர் தொடங்கிய முதற்கட்ட அகழாய்வு பணியில் சீன கலைநயமிக்க மணிகள், பானை ஓடுகள், பழங்கால கூரை ஓடுகள், இரும்பினாலான ஆணிகள் போன்ற பழங்கால பொருட்களை தோண்டி எடுத்துள்ளனர். இவ்வாறு தோண்டி எடுக்கப்பட்ட பொருட்களை தொல்லியல் துறையினர் பத்திரமாக சேமித்து வைத்துள்ளனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணிகள்  ஜூன் 14-ஆம் தேதி மீண்டும் துவங்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து தொல்லியல் துறையினர் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட அரண்மனையின் இரண்டாவது பாகத்தை கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து தொல்லியல்துறையினர் கூறும் போது, வரலாற்று குறிப்புகளில் மாளிகைமேடு என்னும் பகுதியில் முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட அரண்மனை இன்னும் இருந்து வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சோழர்களின் வரலாற்றுக் காலத்தில் பயன்படுத்திய அரியவகை பொக்கிஷங்களும், அரண்மனையின் மற்ற பாகங்களும் கிடைக்க வாய்ப்பு இருப்பதாக தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |