யூரோ கோப்பை கால்பந்து தொடரில் டென்மார்க், இத்தாலி அணிகள் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது .
யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற 2 வது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் – வேல்ஸ் அணிகள் மோதிக்கொண்டன. இதில் சக வீரர் டாம்ஸ் கார்டு 27 வது நிமிடத்தில் தட்டிக்கொடுத்த பந்தை டென்மார்க் அணி வீரர் கேஸ்பர் டோல்பெர்க் கோல் அடித்து அதிர்ச்சியளித்தார். இதையடுத்து ஆட்டத்தின் பிற்பாதியில் டென்மார்க் வீரர் டோல்பெர்க் 48வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்தார். இறுதிகட்டத்தில் டென்மார்க் அணி வீரர்கள் ஜோகிம் மாலே 88-வது நிமிடத்திலும், பிராத்வெயிட் 90-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்து அதிரடி காட்டினார்.
இறுதியாக 4 – 0 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணி வெற்றி பெற்று கால்இறுதிக்குள் முன்னேறியது. இதை அடுத்து இன்று அதிகாலையில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி -ஆஸ்திரியா அணிகள் மோதிக்கொண்டன. இதில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் ஆட்டத்தின் 95 மற்றும் 105 வது நிமிடங்களில் இத்தாலி அணி தலா ஒரு கோல் அடித்தது. ஆனால் ஆஸ்திரியா அணி 114 வது நிமிடத்தில் ஒரு கோல் மட்டுமே அடிக்க முடிந்தது. இறுதியாக இத்தாலி 2-1 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியா அணியை வீழ்த்தி கால்இறுதிக்குள் நுழைந்தது.