Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி குறித்து…. மத்திய அரசு விளக்கம்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் இந்தியாவில் மொத்தம் 94 கோடி பேர் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் உள்ளதால் 2 தவணை தடுப்பூசி செலுத்த 188 கோடி தடுப்பூசி தேவைப்படுகிறது என மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் பிராமண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில் மாநிலங்களுக்கு இதுவரை 31.51 கோடி தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. மாநிலங்களிடம் தற்போது 1.15 கோடி தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த மூன்று நாட்களில் மாநிலங்களுக்கு 20,48,960 தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |