தமிழகத்தில் கோடை வெளியிலின் தாக்கம் இன்னும் குறையவில்லை. இதற்கு மத்தியில் வெயிலுக்கு இதமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் வெப்பச்சலனம் காரணமாக 6 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட கடலோர மாவட்டம், உள் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்பதால் ஜூலை-1 வரை மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளது.