தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்ததையடுத்து பல்வேறு அதிரடியான மற்றும் மக்களுக்கு பயன்படும் வகையில் சிறப்பான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கொரோனா இக்கட்டான காலத்தில் மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு ரூபாய் 4 ஆயிரம் நிதி உதவி அறிவிக்கப்பட்டது. பேருந்துகளில் மகளிருக்கு இலவசமாக பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்களை முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார். இது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அதுமட்டுமல்லாமல்கொரோனா பேரிடரை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில் தமிழகத்தின் பிரச்சனைகளை 100 நாட்களில் திமுக தீர்த்துவிடும் என்று கூறியது என்ன ஆயிற்று? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தின் பிரச்சினைகள் என்ன ஆனது என்றும், அது எப்பொழுது தீர்க்க போகிறீர்கள்? என்றும் கேள்வியை முன் வைத்துள்ளார். மக்களின் பிரச்சினைகளை கடிதங்களாக பெற்ற அந்த பெட்டியின் சாவி தொலைந்து விட்டதா? அல்லது அந்தப் பெட்டியே தொலைந்து விட்டதா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.