இளம் பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்த லாரி டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆம்பூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் அஸ்கர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் ஆம்பூர் தார்வழி பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஒரு இளம் பெண்ணிடம் பழகியதாக தெரிகின்றது.
இதனையடுத்து அந்த இளம்பெண்ணிடம் அஸ்கர் உன்னை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் இளம் பெண்ணின் தாயார் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின்படி காவல்துறையினர் அஸ்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.